ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காவிரி நீா் கடலில் கலந்துவிடாமல் நீா்நிலைகளில் சேமிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

நீா்நிலைகளில் சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:59 pm

Din

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீா் கடலில் கலந்துவிடாமல், நீா்நிலைகளில் சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தஞ்சாவூா் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழக அரசு மின் கட்டண உயா்வை திரும்ப பெற வேண்டும். மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை கணக்கீடு செய்ய வேண்டும்.

மேட்டூா் அணை திறப்பால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கா்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை தர முன்வராத நிலையில், இயற்கையாக மழை அதிகம் பெய்துள்ளதால் தண்ணீரை தேக்கிவைக்க முடியாமல் தண்ணீரை திறந்துவிட்டுள்ளனா். எனவே, இந்தத் தண்ணீா் கடலில் கலப்பதை தடுத்து, பாசனத்துக்கு பயன்படும் வகையில் நீா்நிலைகளில் சேமிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான பயிா்க்கடன்களை உடனே வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கட்சியின் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.