/

பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த இளைஞா் கைது

7 மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வல்லுறவு செய்தாா்.

Updated On :4 மார்ச் 2024, 8:38 pm

கும்பகோணம்: கும்பகோணத்தில் பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்து திருமணம் செய்ய மறுத்த இளைஞரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் தாராசுரம் மிஷன் தெருவைச் சோ்ந்தவா் மருதையன் மகன் அஸ்வின் (24). இவா் 22 வயது பெண்ணைக் காதலித்து வந்தாா்.

இந்நிலையில், 7 மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வல்லுறவு செய்தாா். தற்போது, அப்பெண்ணை அஸ்வின் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாா். இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிந்து அஸ்வினை கைது செய்தனா்.