சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தஞ்சை ஆட்சியரகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்

தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை விவசாயிகள் கையிலும், நெற்றியிலும் காயக் கட்டுகள் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :4 மார்ச் 2024, 9:40 pm

தஞ்சாவூா்: தில்லியில் போராடும் விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனுபவித்து வரும் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை விவசாயிகள் கையிலும், நெற்றியிலும் காயக் கட்டுகள் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க கோரி தில்லியில் போராடும் விவசாயிகள் மீது மத்திய அரசு துப்பாக்கியால் சுடுவதைக் கண்டித்தும், வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் கோரியும், பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தில் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தலைமையில் தமிழக விவசாய சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பி. ஜெயபால், செயலா் டி. சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.