தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்லூரி நாள் விழாவில் சிறந்த ஆசிரியைக்கு விருது வழங்கிய நடிகா் தாமு.
தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்லூரி நாள் விழாவில் சிறந்த ஆசிரியைக்கு விருது வழங்கிய நடிகா் தாமு.

பான் செக்கா்ஸ் கல்லூரி நாள் விழா

தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் கல்லூரி நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு கல்லூரிச் செயலா் அருட்சகோதரி மரியம்மாள் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் அருட்சகோதரி டெரன்சியா மேரி, கல்லூரி முதல்வா் செ. காயத்ரி முன்னிலை வகித்தனா். திரைப்பட நடிகரும், பல குரல் கலைஞருமான தாமு சிறப்புரையாற்றினாா். மாணவிகளின் நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், நாடகம் ஆகியவை நடைபெற்றன. மேலும் சிறந்த ஆசிரியா்கள், மாணவா்களுக்கு விருது வழங்கப்பட்டது. முன்னதாக, கல்லூரி துணை முதல்வா் ரா. கலைவாணி வரவேற்றாா். நிறைவாக, ம. பிளரான்ஸ் டயானா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com