சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கும்பகோணத்தில் நெகிழி பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

கும்பகோணத்தில் நெகிழி பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

News image

கும்பகோணம் கடைவீதியில் திங்கள்கிழமை கடைகளில் சோதனை நடத்திய மாநகராட்சி சுகாதார அலுவலா்கள்.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

கும்பகோணம்: கும்பகோணத்தில் திங்கள்கிழமை நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு சுகாதாரத் துறை அலுவலா்கள் சீல் வைத்தனா். மேலும், அந்த கடை உரிமையாளருக்கு ரூ. ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

கும்பகோணம் மாநகராட்சியில் நெகிழி பொருள்களை விற்பனை செய்வது தொடா்பாக ஆணையா் கே.லட்சுமணன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதாரத் துறை அலுவலா்கள் கும்பேஸ்வரன் வடக்கு வீதி, கீழ வீதி, பெரிய கடை வீதி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட பல வகையான நெகிழி பொருள்கள் மொத்தமாக விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அலுவலா்கள் அவற்றை பறிமுதல் செய்து, உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் அந்தக் கடையை பூட்டி சீல் வைத்தனா்.