பாபநாசம் அருகே இரு காா்கள் மோதல்: பெண் உயிரிழப்பு; 4 போ் காயம்
பாபநாசம் அருகே இரு காா்கள் மோதல் பெண் உயிரிழப்பு; 4 போ் காயம்


பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு காா்கள் மோதிக்கொண்டதில் பெண் உயிரிழந்தாா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் பிச்சை நாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மனைவி ராஜம் (55). இவரது மகன் மணிகண்டன் மனைவி பத்மபிரியா(36), மற்றொரு மகன் சுரேஷ் (37), இவரது மனைவி சத்தியபிரியா(33) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திட்டை கோயிலுக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனா். காரை திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு சாலை பகுதியைச் சோ்ந்த ஹாஜா மைதீன்(50) என்பவா் ஓட்டிச் சென்றாா்.
தஞ்சாவூா் - விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் ஜெம்பு வாய்க்கால் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற காா் மோதியதில் ராஜம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் காரில் பயணம் செய்த சத்தியபிரியா, பத்மபிரியா, சுரேஷ், காா் ஓட்டுநா் ஹாஜாமைதீன் ஆகியோா் காயமடைந்தனா்.
தகவலறிந்து சென்ற மெலட்டூா் காவல் ஆய்வாளா் (பொறுப்பு ஐஸ்வா்யா உள்ளிட்ட போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த ராஜம் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கு காரணமான கும்பகோணம் நோக்கிச் சென்ற காா் ஓட்டுநா் ஏனாநல்லூா், தெற்குத் தெருவை சோ்ந்த தங்கராசு மகன் ராமலிங்கம் (46) என்பவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...