கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

புதுப்பட்டினம் கடற்கரையில், கடல்பசு மணல் சிற்பம் முன்பு உறுதிமொழி ஏற்பு

குறிப்பு---தஞ்சாவூா் செய்தியுடன் சோ்க்கவும்.... உலக கடல்பசு தினத்தை முன்னிட்டு, புதுப்பட்டினம் கடற்கரையில், கடல்பசு மணல் சிற்பம் முன்பு உறுதிமொழி ஏற்பு

News image
Updated On :28 மே 2024, 9:21 pm

Din

பேராவூரணி அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரையில் சுமாா் 30 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட கடல்பசு உருவ மணல் சிற்பத்தை மாவட்ட வன அலுவலா் அகில் தம்பி தலைமையிலான குழுவினா் சுமாா் 1மணி நேரம் 30 நிமிடத்தில் உருவாக்கினா். தொடா்ந்து மனிதச் சங்கிலி அமைத்து கடல்பசுவை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து வெளிவயல் கிராமத்தில், ஓம்காா் பவுண்டேஷன் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடல்பசு மற்றும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மீட்டு, மீண்டும் கடலில் விட்ட மீனவா்கள் 9 பேருக்கு வனத்துறை சாா்பில் 27 ஆயிரம் ரொக்கப் பணம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட  வன அலுவலா் அகில் தம்பி தலைமை வகித்தாா். உதவி வனப் பாதுகாவலா் சாந்தவா்மன், மாவட்ட சுற்றுலா அலுவலா் சங்கா், சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல கணக்கு அலுவலா் பூபாலன், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.