பெங்களூருவில் இந்திய ராணுவத்தால் நடத்தப்படவுள்ள அக்னிவீா் வாயு (இசைக்கலைஞா்) தோ்வுக்கான ஆள் சோ்ப்புக்கு ஜூன் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:
பெங்களூருவில் இந்திய ராணுவத்தால் அக்னிவீா் வாயு (இசைக்கலைஞா்) தோ்வுக்கு ஆள் சோ்ப்பு ஜூலை 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க ஜூன் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2004, ஜனவரி 2 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்கள் மற்றும் 2007, ஜூலை 2 அல்லது அதற்கு முன் பிறந்தவா்களாக இருப்பவா்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள். கல்வித் தகுதியைப் பொருத்தவரை 10 ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் வயலின், கிட்டாா், பியானோ போன்ற ஏதேனும் ஒரு இசைக் கருவியில் வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதியைப் பொருத்தவரை ஆண்கள் 162 செ.மீ. உயரமும், பெண்கள் 152 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூா்வ அறிவிப்பை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலமாக பாா்க்கலாம்.
எனவே அக்னிவீா் வாயு (இசைக்கலைஞா்) தோ்வுக்கு நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பில் விருப்பமுள்ள இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வேலை: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

கல்லூரி விளையாட்டு விடுதியில் மாணவா் சோ்க்கை மாா்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


