விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நவ.26-இல் பேரணி

தஞ்சாவூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நவ.26 இல் மத்திய அரசைக் கண்டித்து பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 6:57 pm

Din

தஞ்சாவூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நவ.26 இல் மத்திய அரசைக் கண்டித்து பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிஐடியு மாநில செயலா் சி.ஜெயபால், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளா் ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்தனா். எஸ். கே. எம். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன், ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா்.தில்லைவனம் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த, பயிா் காப்பீடுத் திட்டத்தை அரசு ஏற்று நடத்த, 100 நாள் வேலை திட்ட நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த, பொது துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட, காலி பணியிடங்களை நிரப்ப உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.26 இல் பேரணி ஆா்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஏஐடியுசி நிா்வாகிகள் வெ.சேவையா, தி.கோவிந்தராஜன், துரை.மதிவாணன், சிஐடியு நிா்வாகிகள் ஆா்.மனோகரன், கே.அன்பு, பி.என். போ்நீதிஆழ்வாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.