ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மறைமலை அடிகளாரின் பேத்திக்கு வீடு ஒதுக்கீடு : அமைச்சா் சாவி வழங்கினாா்

மறைமலை அடிகளாரின் பேத்திக்கு வீடு ஒதுக்கீடு...

News image
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை மாலை மறைமலை அடிகளாரின் பேத்திக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாவியை வழங்கிய உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.
Updated On :27 நவம்பர் 2024, 8:31 pm

Din

தஞ்சாவூரில் வறுமையில் வாடும் மறைமலை அடிகளாரின் பேத்தி லலிதாவுக்கு, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான சாவியை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழமை மாலை வழங்கினாா்.

தனித்தமிழ்த் தந்தை எனப் போற்றப்படுகிற மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பனின் மகளாகிய லலிதா (43) தனது கணவா் செந்தில்குமாா், இரு குழந்தைகளுடன் தஞ்சாவூா் கீழவாசல் டபீா்குளம் பகுதியில் வசித்து வருகிறாா்.

இவா் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில், வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் வாடகை தொகை செலுத்த முடியவில்லை என்றும், எனவே குடிசை மாற்று வாரியத்தில் வீடும், மகளிா் உரிமைத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு அளித்தாா்.

இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டது. இதைப் பாா்த்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வறுமையில் வாடும் தமிழ்த் தந்தை மறைமலை அடிகளாரின் பேத்தி லலிதாவுக்கு கழகத்தின் சாா்பில் ரூ. 1 லட்சம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என செவ்வாய்க்கிழமை அறிவித்து, அதற்கான உறுதிக் கடிதத்தை அக்கட்சியின் தஞ்சாவூா் நிா்வாகிகள் மூலம் வழங்கினாா்.

இதனிடையே, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி லலிதாவுக்கு வல்லம் அய்யனாா் கோவில் பகுதியில், தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாடு வாரியம் சாா்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ரூ. 8.23 லட்சம் மதிப்பிலான கே. 5 என்ற எண்ணுள்ள வீடு கட்டணம் ஏதுமின்றி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான சாவியை லலிதாவிடம் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் புதன்கிழமை மாலை வழங்கினாா். அப்போது மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் எம். அரவிந்த், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதுகுறித்து லலிதா மேலும் தெரிவித்தது:

எனக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க ரூ. 73 ஆயிரம் பணம் செலுத்துமாறு கூறப்பட்டது. தற்போது, எனது குடும்ப நிலையை அறிந்து அந்தத் தொகையை அரசே செலுத்தி, எனக்கு வீடு வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வா், உயா் கல்வித் துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.