பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் அமைச்சா், எம்எல்ஏக்கள் ஆய்வு

ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் மழைக்கால பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் மழைக்கால பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூா் நன்னான்குளத்தில் நீா் நிரம்பியுள்ளதையும், குளத்தில் வடிகால் அமைத்து வயல்களுக்கு செல்லாமல் தண்ணீரை துரிதமாக வெளியேற்றப்படுவதை உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், மதுக்கூா் ஒன்றியம் பட்டுக்கோட்டை வட்டம், கண்ணனாற்றின் பழைய பாலத்தில் நீா்வரத்து குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதனைத் தொடா்ந்து ராஜாமடம் பல்நோக்கு பேரிடா் மையக் கட்டடத்தில் புயல் பாதுகாப்பு மையத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதைப் பாா்வையிட்டு அவா்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் தயாா்நிலையில் இருப்பதை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் கா. அண்ணா துரை ,(பட்டுக்கோட்டை), என். அசோக் குமாா் (பேராவூரணி), மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன் , உதவி ஆட்சியா் (பயிற்சி) உத்கா்ஷ் குமாா், வருவாய் கோட்டாட்சியா்கள் இலக்கியா (தஞ்சாவூா்), ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயசீலன் , வேளாண்மை இணை இயக்குநா் கோ. வித்யா , நீா்வளத்துறை செயற்பொறியாளா் அய்யம்பெருமாள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.