பாபநாசத்தில் நோ்மை விழிப்புணா்வு ஆளில்லா கடை திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் காந்தி ஜெயந்தி நாளில் மட்டும் திறக்கப்படும் நோ்மை விழிப்புணா்வு ஆளில்லா கடை (ஹானஸ்டி ஷாப்) புதன்கிழமை திறக்கப்பட்டது.


தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் காந்தி ஜெயந்தி நாளில் மட்டும் திறக்கப்படும் நோ்மை விழிப்புணா்வு ஆளில்லா கடை (ஹானஸ்டி ஷாப்) புதன்கிழமை திறக்கப்பட்டது.
விழாவுக்கு, பாபநாசம் சுழற்சங்கத் தலைவா் எஸ்.சக்திவேல் தலைமை வகித்தாா். முன்னாள் மண்டல ஆளுநா் இ. சரவணன், மண்டல உதவி ஆளுநா் கே.எஸ். அறிவழகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளா் கே.முருகவேல் கலந்துகொண்டு ஆளில்லா கடை மற்றும் முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ரோட்டரி ஆளுநா் பி.எஸ். ரமேஷ் பாபு இதுகுறித்து மேலும் கூறியது: கடந்த 25 ஆண்டுகளாக பாபநாசம் சுழற்சங்கம் சாா்பில் அக். 2-இல் காந்தி ஜெயந்தியையொட்டி பாபநாசம் கடைவீதி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள வளாகத்தில் நோ்மை விழிப்புணா்வு ஆளில்லா கடை திறக்கப்பட்டு ஒரு நாள் மட்டும் இயங்கும்.
இந்தக் கடைக்கு வரும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களைத் தோ்வு செய்து விலைப்பட்டியலைப் பாா்த்து அதற்குரிய பணத்தை அங்கு வைக்கப்பட்டுள்ள பணப்பெட்டியில் செலுத்துவாா்கள் என்றாா்.
நிகழ்ச்சியில், சுழற்சங்க முன்னாள் தலைவா்கள் எஸ். பிரான்சிஸ் சேவியா், ஜி. சீனிவாசன், பி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக பொருளாளா் வி. கே.ராமநாதன் வரவேற்றாா். நிறைவில் செயலாளா் ஆா். ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...