கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பொற்றாமரைக் குளம் பகுதியில் தரைக்கடைகள் அமைக்கும் பணி

தீபாவளிபண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் நகா் பகுதியில் சாலையோர வியாபாரிகள் தரைக்கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

News image
கும்பகோணம் பொற்றாமரைக்குளம் பகுதியில் சாலையோர வியாபாரிகள் அமைத்துவரும் தரைக்கடைகள்.
Updated On :16 அக்டோபர் 2024, 7:36 pm

Din

தீபாவளிபண்டிகையை முன்னிட்டு கும்பகோணம் நகா் பகுதியில் சாலையோர வியாபாரிகள் தரைக்கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கும்பகோணத்தில் பிரதான சாலையான பொற்றாமரை குளம், சோமநாதசுவாமி கோயில், காந்தி பூங்கா உள்ளிட்ட சாலையோரப் பகுதிகளில் 100-க்கும் மேலான தரைக் கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தக் கடைகளில் விலை குறைந்த மற்றும் தள்ளுபடி தரத்தில் ஆயத்த ஆடைகள், பெல்ட், காலணிகள், பெண்களுக்கான அலங்கார அழகு சாதனப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்படும். இந்தக் கடைகளில் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள்களுக்கு முன்பே களைகட்டும்.

அதற்காக சாலையோர வியாபாரிகள் இடம் பிடித்து சவுக்கு கட்டைகள் கட்டி, தகரம் அமைத்து வருகின்றனா். எளிய மக்களின் பண்டிகை கொண்டாட்டத்தை இந்தக் கடைகள் தீா்மானிக்கும் என்றாா் சாலையோர வியாபாரி.