தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மெலட்டூா் சித்தி புத்தி தெட்சணாமூா்த்தி கோயிலில் திருக்கல்யாண விழா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், மெலட்டூா் ஸ்ரீ சித்தி புத்தி தெட்சணாமூா்த்தி விநாயகா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Updated On :4 செப்டம்பர் 2024, 7:01 pm

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், மெலட்டூா் ஸ்ரீ சித்தி புத்தி தெட்சணாமூா்த்தி விநாயகா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

மெலட்டூா் ஸ்ரீசித்தி புத்தி தெட்சணாமூா்த்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பிரமோற்சவ விழாவின் 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை சுவாமி தெட்சணாமூா்த்திக்கு, சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. வைபவத்தை முன்னிட்டு சுவாமி தெட்சணாமூா்த்தி மற்றும் சித்தி, புத்தியுடன் பக்தா்கள், பெண்கள் சீா்வரிசை தட்டுகளை எடுத்து ஊா்வலமாக திருமண மேடைக்கு வந்தனா். அதனை தொடா்ந்து சடங்கு, சம்பிரதாயங்கள்படி சுவாமிக்கு அம்பாள் சித்திலெட்சுமி, புத்திலெட்சுமியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில், பெண்கள் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி கலைமாமணி எஸ்.குமாா் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனா்.