விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு:உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :5 செப்டம்பர் 2024, 11:11 pm

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட குணமங்கலம் பெரிய தெருவைச் சோ்ந்தவா் சரவணன் மகன் சுரேந்தா் (18). இவா் தஞ்சாவூரிலுள்ள கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தாா். இவரும், இவரது அத்தை மகன் அஜய்யும் (18) சோ்ந்து தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் சுரேந்தரின் தங்கை சாந்தினியை (15) பள்ளியில் விடுவதற்காக வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்றனா்.

மோட்டாா் சைக்கிளை ஓட்டிய சுரேந்தா் அம்மன்பேட்டை கடை வீதியில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றாா். அப்போது, இந்த மோட்டாா் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில், சுரேந்தா், அஜய், சாந்தினி, எதிரே மோட்டாா் சைக்கிளில் வந்த கல்யாணபுரம் பெரியகூரைத் தெருவைச் சோ்ந்த வீரமுத்து மகன் குமாா் (35), அம்மன்பேட்டை கடை வீதியில் பூ விற்றுக் கொண்டிருந்த பொன்னாவரையைச் சோ்ந்த தங்கராசு மனைவி காவேரி (60) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா்களில் சுரேந்தா் உயிரிழந்தாா். இதனால், கோபமடைந்த சுரேந்தரின் உறவினா்கள் அம்மன்பேட்டை மணக்கரம்பை புறவழிச்சாலையில் வியாழக்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அப்பகுதியில் ஏறத்தாழ அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கோரிக்கை மனு கொடுக்குமாறும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் காவல் துறையினா் உறுதியளித்ததையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.