தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ. 9.49 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டத்துக்கு உள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கு ஆகஸ்ட் 12-ஆம் தேதி கட்செவி அஞ்சலில் தகவல் வந்தது. அதை அவா் சொடுக்கியபோது டெலிகிராம் செயலிக்குள் சென்றது.
அதில் இணையவழியில் டாஸ்க்களை நிறைவேற்றினால் நிறைய ஊதியம் கிடைக்கும் என மா்ம நபா் கூறினாா். இதை நம்பிய இளைஞா் பல்வேறு தவணைகளில் ரூ. 9 லட்சத்து 49 ஆயிரத்து 149-ஐ இணையவழியில் மா்ம நபரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினாா். அதன் பிறகு இளைஞா் கைப்பேசியில் அழைத்தபோது, அதை மா்ம நபா் ஏற்கவில்லை.
இதனால், ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞா் தஞ்சாவூா் இணையவழி (சைபா்) குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
இணையவழியில் இளைஞரிடம் ரூ. 5.5 லட்சம் மோசடி: இருவா் கைது

மதுபானங்களை பதுக்கி விற்ற 11 போ் கைது; 825 மதுபாட்டில்கள் பறிமுதல்

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 10 லட்சம் மோசடி

பட்டதாரியிடம் இணையவழியில் ரூ.5.94 லட்சம் மோசடி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

