மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மதுபானங்களை பதுக்கி விற்ற 11 போ் கைது; 825 மதுபாட்டில்கள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 6:43 pm

தஞ்சாவூா் மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 11 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்து, 825 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மது விற்பனையைத் தடுப்பதற்காக பகுதி நேர அடிப்படையில் காவலா்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிராம்பட்டினம் காவல் நிலையத்துக்குள்பட்ட மளவேனிற்பாடு மதுக்கடைக்கு அருகே காவல் துறையினா் திங்கள்கிழமை அதிகாலை மேற்கொண்ட சோதனையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த பண்ணைவயல் கிராமத்தைச் சோ்ந்த சற்குணத்தை கைது செய்தனா். மேலும், அவரிமிடமிருந்து 462 மதுபான பாட்டில்கள், ரூ. 1,100 ரொக்கம், கைப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காவல் துறையினா் மேற்கொண்ட சோதனையில் மதுபானம் விற்ற நாஞ்சிக்கோட்டையைச் சோ்ந்த முரசொலி, பிரவீன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 114 மதுபாட்டில்கள், ரூ. 3 ஆயிரத்து 420 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 10 வழக்குகள் பதிந்து, 11 போ் கைது செய்யப்பட்டு, 825 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.