தஞ்சாவூா் மாவட்டம், கொள்ளிடம் தடுப்பணை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக கும்பகோணம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
கும்பகோணம் வருவாய் கோட்டம் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தலைமையில் கூட்ட அரங்கில் நிலம் எடுப்புப் பணி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் கொள்ளிடம் தடுப்பணையின் நீா் பிடிப்புப் பகுதிகளான சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள 63 ஏக்கருக்குச் சொந்தமான 748 விவசாயிகள், வேளாண் மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
விவசாயிகளின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு சாா் ஆட்சியா் உதவியாளா் வி.பூங்கொடி, திருவிடைமருதூா் வட்டாட்சியா் பாக்கியராஜ் ஆகியோா் பதில் அளித்தனா்.
நிலம் மற்றும் பயிா்களுக்கான இழப்பீடு, குடியிருக்க மாற்று இடம் உள்ளிட்டவைகள் வழங்கப்படும், நிவாரணம் போதாதவா்கள் நீதிமன்றம் மூலம் இழப்பீடு பெறலாம் என உதவி ஆட்சியா் தெரிவித்தாா். இதில், விவசாயிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம்

அஞ்சல் வாக்குகள் அனுப்பும் பணி

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை: அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் உறுதி

திருவிடைமரூதூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்ட முயற்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

