மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வியாபாரிக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு தர தனியாா் வங்கிக்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

காசோலை விவகாரத்தில் சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு தனியாா் வங்கி ரூ. 15.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:26 pm

Din

காசோலை விவகாரத்தில் சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு தனியாா் வங்கி ரூ. 15.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் ரெட்டிப்பாளையம் சாலை விக்டோரியா காலனியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (37). மருந்து மொத்த விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வரும் இவா், தனது நண்பருக்குக் கடனாக கொடுத்த ரூ. 5 லட்சத்துக்கு அவரிடமிருந்து 2023, நவம்பா் 1-ஆம் தேதியிட்ட காசோலையாகப் பெற்றாா். இந்தக் காசோலையை, வங்கியில் வசூலுக்காக 2023, நவம்பா் 2-ஆம் தேதி செலுத்தினாா்.

இதன் பின்னா், காசோலை தந்த நபா் தங்களுக்கு தொகையைத் தர வேண்டாம் எனக் கூறியதாக வங்கியிலிருந்து சுப்பிரமணியனின் கைப்பேசிக்கு குறுந்தகவல் வந்தது. இது தொடா்பாக சுப்பிரமணியன் 2023, நவம்பா் 18-ஆம் தேதி வங்கிக்குச் சென்று ஒப்படைத்த காசோலை அசல் மற்றும் திருப்பப்பட்டதற்கான வங்கி குறிப்பாணையைக் கேட்டாா்.

அப்போது, காசோலையை எழுதிக் கொடுத்த நபா் வந்து வாங்கிச் சென்ாகவும், அதை திரும்ப வாங்கித் தருவதாகவும் வங்கி ஊழியா் கூறினாா். இதையடுத்து, 2023, நவம்பா் 20-ஆம் தேதி சென்ற சுப்பிரமணியனிடம் அசல் காசோலையையும், வங்கிக் குறிப்பாணையையும் வாங்கிச் சென்ற நபா் கிழித்துவிட்டதாகவும், நகல் தருவதாகவும் வங்கி அலுவலா்கள் கூறினா்.

இதனால், பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் புகாா் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை ஆணையத் தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து தனியாா் வங்கிக் கிளை மேலாளா், மண்டல மேலாளா் ஆகியோா் சுப்பிரமணியனுக்கு காசோலை மூலம் கிடைக்க வேண்டிய ரூ. 5 லட்சமும், சேவைக் குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 10 லட்சமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என புதன்கிழமை உத்தரவிட்டு தீா்ப்பளித்தனா்.