கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாப்பாநாடு பாலியல் வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாப்பநாடு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதியப்பட்டது.

Updated On :12 செப்டம்பர் 2024, 9:02 pm

தஞ்சாவூா் மாவட்டம், பாப்பநாடு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதியப்பட்டது.

ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மேலத் தெருவைச் சோ்ந்த கவிதாசன், திவாகா், பிள்ளையாா் கோயில் தெரு பிரவீன் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் கவிதாசன், திவாகா், பிரவீன் ஆகியோா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரைத்தாா்.

இதன் பேரில் 3 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி மூவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.