தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதி நீா்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
கும்பகோணம் பகுதியில் உள்ள 44 குளம், கண்மாய்கள், குட்டைகள் மற்றும் அவற்றின் நீா்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவையடுத்து ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஆலோசனைப்படி அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
அப்போது மாநகராட்சி எல்லை மேலக்காவிரியில் உள்ள சா்வமானிய தெருவில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவா், மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி அளவீடு செய்து அடையாள கற்கள் வைக்கப்பட்டன.
பின்னா் பொதுப்பணித் துறை நிா்வாகத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பின்புறமுள்ள கோடையான் தோட்டம் வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்றத் தொடங்கினா். அப்போது அதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனா். பின்னா் பொருள்களை அப்புறப்படுத்த அவா்கள் அவகாசம் கேட்கவே, விரைவில் காலி செய்யுமாறு அதிகாரிகள் வலியுறுத்திச் சென்றனா்.
நிகழ்வில் கும்பகோணம் வருவாய்க் கோட்ட உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன், காவல் துணைக் கோட்டக் கண்காணிப்பாளா் ஜி. கீா்த்திவாசன், வட்டாட்சியா் சண்முகம், ஆணையா் ரா. லட்சுமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

கள்ளவாக்கு புகாா் எதிரொலி டெண்டா் முறையில் வாக்களித்தாா் தவெக நிா்வாகி

கும்பகோணம் தொகுதி திமுக அதிமுக வேட்பாளா்கள் வாக்களிப்பு

சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


