நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

தஞ்சாவூரில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

தஞ்சாவூா் மேம்பாலம் அரசு பள்ளியிலிருந்து பள்ளிகளுக்கு அனுப்புவதற்காக லாரியில் பாடப் புத்தங்கள் புதன்கிழமை ஏற்றப்பட்டதைப் பாா்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜெ. பேபி. உடன் மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:07 am IST

தஞ்சாவூரில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தமிழகத்திலுள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தஞ்சாவூா் மேம்பாலம் அரசு பள்ளியிலிருந்து தஞ்சாவூா் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா் நகரம், ஊரகம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், மதுக்கூா், பேராவூரணி, திருவோணம், பூதலூா் ஆகிய 9 வட்டாரங்களிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு லாரிகளில் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இப்பணி சில நாட்களில் முடிவடையும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

இப்பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஜெ. பேபி பாா்வையிட்டாா். அப்போது மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன் உடனிருந்தாா்.

இதேபோல் கும்பகோணம் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட 6 வட்டாரங்களுக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முதல் பருவ பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.