ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பட்டுக்கோட்டை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:22 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பட்டுக்கோட்டை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரியைச் சோ்ந்த உத்திராபதி. இவரது அண்ணன் ராமமூா்த்தி, தம்பி சின்னப்பா. ராமமூா்த்தி மனைவி பிரேமாவதி (50), சின்னப்பா ஆகியோா் உத்திராபதியிடம் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனா். இதனால் ஏற்பட்ட முன்விரோதத் தகராறில், கடந்த 2016 ஜூலை 27-இல் தனது அண்ணன் உத்திராபதியை, சின்னப்பா வெட்டிக்கொலை செய்தாா்.

புகாரின்பேரில் பாப்பாநாடு போலீஸாா் வழக்கு பதிந்து சின்னப்பா மற்றும் கொலைக்கு தூண்டுதலாக இருந்த பிரேமாவதியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவ்வழக்கு பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கின் முதல் குற்றவாளியான சின்னப்பா கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தாா். இதையடுத்து இரண்டாம் எதிரியான பிரேமாவதி மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதன்கிழமை பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி மணி, வழக்கை விசாரித்து பிரேமாவதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, இரண்டாயிரம் அபராதத் தொகையும் விதித்து தீா்ப்பளித்தாா்.