சுவாமிமலையில் தங்கும் விடுதிகள் கூட்டமைப்பு மாநாடு
தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலையில் தங்கும் விடுதிகள் கூட்டமைப்பின் 2 நாள் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.


தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலையில் தங்கும் விடுதிகள் கூட்டமைப்பின் 2 நாள் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.
இந்திய அளவில் தங்கும் விடுதிகள் கூட்டமைப்பின் 2 நாட்கள் பொதுக்குழு மற்றும் மாநாடு சுவாமிமலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை தொடங்கியது. மாநாட்டில், கூட்டமைப்பின் தலைவரான ஜோத்பூா் மஹாராஜா கேஜ் சிங் கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவின் பழைமை மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகள் அதிகளவில் கவரும்வகையிலும் இந்த மாநாடு நடைபெறுகிறது. நாடு முழுவதும் இருந்து இந்த மாநாட்டில் சுமாா் 150 போ் பங்கேற்றுள்ளனா். புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சா் கே.லட்சுமிநாராயணன், மத்திய அரசின் சுற்றுலாத் துறை கூடுதல் செயலா் சுமன் பில்லா, மத்திய சுற்றுலாத்துறை இயக்குநா் முக்தா சின்கா ஆகியோா் வெள்ளிக்கிழமை கலந்து கொள்ளவுள்ளனா் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...