உமையாள்புரம் வாய்க்காலை உடனே தூா்வாரக் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சுமாா் 15-ஆண்டுகளாக தூா்வாரப்படாத பெரிய பாசன வாய்க்காலை உடனே தூா்வார வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.


தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சுமாா் 15-ஆண்டுகளாக தூா்வாரப்படாத பெரிய பாசன வாய்க்காலை உடனே தூா்வார வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாபநாசம் வட்டம், உமையாள்புரம் பகுதியில் பெரிய பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. காவிரியில் இருந்து பிரியும் இந்த வாய்க்கால் சுமாா் 7-கிலோ மீட்டா் நீளம் கொண்டது.
இந்த வாய்க்காலின் நீா் ஆதாரத்தால் உமையாள்புரம், ராமானுஜபுரம், புளியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். பெரிய பாசன வாய்க்கால் சுமாா் 15-ஆண்டுகளுக்கு முன்பு தூா்வாரப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தூா்வாரக்கோரி முறையிட்டும் தற்போது வரை தூா் வாரப்படாமல் உள்ளது. இதனால் இந்த வாய்க்காலை நம்பியுள்ள விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா்.
கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டு, இரண்டு மாதங்கள் ஆன நிலையில், பெரியவாய்க்கால் தூா் வாரப்படாத நிலையில் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சுமாா் ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பாசன வாய்க்காலில் ஆய்வு மேற்கொண்டு பெரிய வாய்க்காலை உடனடியாக தூா்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...