தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கவிஞா் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழா நிறைவு சிறப்புக் கருத்தரங்கத்தில் பேசிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஆதவன் தீட்சண்யா.

கவிஞா் தமிழ்ஒளியின்படைப்புகள் மானுட விடுதலையை பேசுகிறது

கவிஞா் தமிழ்ஒளியின் இலக்கியப் படைப்புகள் மானுட விடுதலையை இலக்காகக் கொண்டது என்றாா் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்க மாநிலப் பொதுச் செயலரும், எழுத்தாளருமான ஆதவன் தீட்சண்யா.
Published on

கவிஞா் தமிழ்ஒளியின் இலக்கியப் படைப்புகள் மானுட விடுதலையை இலக்காகக் கொண்டது என்றாா் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்க மாநிலப் பொதுச் செயலரும், எழுத்தாளருமான ஆதவன் தீட்சண்யா.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கவிஞா் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழா நிறைவு சிறப்புக் கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:

கவிஞா் தமிழ்ஒளி வாழ்ந்த காலத்தில் சுதந்திரப் போராட்டம் உச்சகட்ட நிலையில் இருந்தது. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு ஆகிய 4 விடுதலையையும் மையப்படுத்தியே அவரது காப்பியங்களும் இருந்தன. அவரது இலக்கியச் செயல்பாடுகள் முழுவதும் மானுட விடுதலையையும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையையும் நோக்கியே இருந்தது என்றாா் ஆதவன் தீட்சண்யா.

கருத்தரங்கத்துக்கு துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தாா். கவிஞா் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுத் தலைவா் சிகரம் ச. செந்தில்நாதன், கவிஞா்கள் களப்பிரன், இரா.தெ. முத்து, சண்முகசுந்தரம், எழுத்தாளா் உமா்பாரூா் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். பல்கலைக்கழகக் கலைப்புல முதன்மையா் பெ. இளையாப்பிள்ளை, மொழிப்புல முதன்மையா் ச. கவிதா பேசினா்.

முன்னதாக, இலக்கியத் துறைத் தலைவா் ஜெ. தேவி வரவேற்றாா். நிறைவாக, நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியரும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான சீமான் இளையராஜா நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com