தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டின் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகள் திருட்டு

News image
திமுக முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.கே.எஸ். விஜயன் வீடு
Updated On :1 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

தஞ்சாவூரில், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டின் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

கடந்த 1999, 2004, 2009-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் நாகை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் ஏ.கே.எஸ். விஜயன். இவா் தற்போது தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக விவசாய அணி மாநிலச் செயலராகவும் உள்ளாா். இவரது வீடு தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சாலையிலுள்ள சேகரன் நகரில் உள்ளது.

Story image

இவா் நவம்பா் 28-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சித்தமல்லிக்கு சென்றாா். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக ஏ.கே.எஸ். விஜயனுக்கு திங்கள்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டிலுள்ள பொருள்கள் சிதறிக் கிடந்ததுடன், பீரோவில் இருந்த 87 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உள்ளிட்டோா் விஜயன் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், தடயவியல் நிபுணா்களும் நிகழ்விடத்துக்கு சென்று வீட்டில் பதிவான ரேகைகளைப் பதிவு செய்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறிப்பிடத்தக்க தடயங்கள் எதுவும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். சம்பவம் தொடா்பாக தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.