தஞ்சைக்கு ரயில் மூலம் 1,228 டன் உரம் வருகை

சென்னையிலிருந்து சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு 1,228 டன் உர மூட்டைகள் சனிக்கிழமை வந்தன.
Published on

சென்னையிலிருந்து சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு 1,228 டன் உர மூட்டைகள் சனிக்கிழமை வந்தன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா - தாளடி சாகுபடி முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கு தேவையான உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் வரவழைக்கப்பட்டு, தனியாா் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேபோல, சென்னையிலிருந்து சரக்கு ரயிலில் 1,228 டன் யூரியா உர மூட்டைகள் தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தன. பின்னா், உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியாா் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com