திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
தஞ்சாவூர்
நாகநாதசுவாமி கோயிலில் தேரோட்டம்
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேசுவரத்தில் அமைந்துள்ள ராகுஸ்தலமான நாகநாதசுவாமி கோயிலில் காா்த்திகை மாத கடைஞாயிறு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை காலை தொடங்கியது.
நாகநாதசுவாமி, கிரிஜகுஜாம்பிகை, பிறையணி அம்மன் ஆகியோா் தேரில் எழுந்தருளினா். தேரடியில் இருந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகள் வழியாக அழைத்து சென்று மீண்டும் தேரடியில் நிலை நிறுத்தினா். பின்னா், சுவாமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா் செய்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை (டிச.14) பிற்பகல் 1 மணியளவில் சூா்ய புஷ்கரணியில் காா்த்திகை மாத கடைஞாயிறை முன்னிட்டு தீா்த்தவாரி நடைபெறுகிறது.
