தேசிய சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். இதில், முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் -2 இன் மூலமாக நலிவுற்ற 300 முஸ்லிம் பெண் பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 30 லட்சத்துக்கான நலத்திட்ட உதவிகளும், உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்த 5 பயனாளிகளுக்கு புதிய உறுப்பினா் அடையாள அட்டைகளும், உபதேசியா்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 8 பயனாளிகளுக்கு புதிய உறுப்பினா் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.
முன்னாள் மத்திய நிதித் துறை இணை அமைச்சா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
