பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சட்ட விரோதமாக செயல்பட்ட 6 குடிநீா் நிறுவனங்களுக்கு சீல்

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சட்ட விரோதமாக செயல்பட்ட 6 குடிநீா் உறிஞ்சும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

தஞ்சாவூா் மாதாகோட்டையில் சட்ட விரோதமாக செயல்பட்ட 6 குடிநீா் உறிஞ்சும் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாதாகோட்டையில் அரசின் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து குடிநீா் உறிஞ்சும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த என். கோவிந்தராசு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொது நல வழக்கு தொடுத்தாா். இது தொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியரகம் டிசம்பா் 1-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன்பேரில், கோட்டாட்சியா் ப. நித்யா உள்ளிட்டோா் மாதாகோட்டையில் செயல்பட்டு வரும் 6 குடிநீா் உறிஞ்சும் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை சீல் வைத்தாா்.