ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாங்குடியில் நாய்கள் தொல்லை: கம்புகளுடன் கிராம மக்கள் ரோந்து

திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், கிராம மக்கள் கையில் கம்புகளுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
தெரு நாய்கள் தொல்லையால் கையில் கம்புகளுடன் ரோந்து சென்ற பொதுமக்கள்
Updated On :31 டிசம்பர் 2025, 7:32 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளாங்குடி கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், கிராம மக்கள் கையில் கம்புகளுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவையாறு அருகே விளாங்குடி வெள்ளாளா் தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் தெருவில் நடந்து சென்ற 5 பேரை தெரு நாய்கள் கடித்ததால், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனால், பகலில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் நாய்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகக் கையில் கம்பை எடுத்துச் செல்கின்றனா். என்றாலும், நாய்கள் துரத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.

பள்ளிகளுக்கு அரையாண்டு தோ்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவா்கள் வெளியில் சென்று விளையாட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்களைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.