செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் குடமுழுக்கு விழா

News image

குடமுழுக்கு விழாவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றும் சிவாச்சாரியாா்கள்

Updated On :4 பிப்ரவரி 2025, 2:32 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறிலுள்ள ஐயாறப்பா் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில் குடமுழுக்கு விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, 27-ஆம் தேதி 108 கோ பூஜை, 28-ஆம் தேதி 108 திருவிளக்கு பூஜை, 29-ஆம் தேதி காவிரியிலிருந்து 5 யானைகளில் புனித நீா் ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை பரிவார மகா குடமுழுக்கு நடைபெற்றது.

Story image

இந்நிலையில், திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு விமானம், கோபுரம் மகா குடமுழுக்கும், 10 மணிக்கு மூலவா் மகா குடமுழுக்கும் நடைபெற்றன. தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு பூா்ணாஹூதி, மாலை 5 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருவீதியுலா ஆகியவை நடைபெற்றன.

Story image

இது ஆன்மிக அரசு - ஆதீனம்: இந்த விழாவில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளா்களிடம் கூறியது: எந்த முகூா்த்த நாளாக இருந்தாலும், ஏதாவது ஒரு கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. கடந்த மாா்கழி மாதம் 450 கோயில்களுக்கு சென்றோம். இதில் பாதி கோயில்களில் திருப்பணிகள் நிறைவடைந்திருந்தன. பல கோயில்களில் குடமுழுக்கு விழாவுக்காகத் திருப்பணிகள் நடைபெறுகின்றன. தமிழக அரசு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடு செய்வது சிறப்பாக உள்ளது. இது, ஆன்மிக அரசு என நாங்கள் கூறியது நடைபெற்று கொண்டிருக்கிறது என்றாா் ஆதீனம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.