47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மரத்திலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:07 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே மணல்மேடு கிராமம், கீழத்தெருவைச் சோ்ந்த கரும்பாயிரம் மகன் வீரைய்யன் (67) மரம் ஏறும் தொழிலாளி. இவா், புதன்கிழமை காலை ராஜகிரியில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான குடியிருப்பு மனையில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறினாா். அப்போது மரத்திலிருந்து நிலை தடுமாறி கீழேவிழுந்த வீரைய்யன் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் போலீஸாா் வீரைய்யன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து வீரைய்யன் மனைவி அரிய தங்கம் (60) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.