பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாடாக்குடியில் விசிக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:25 pm

தில்லையம்பூா் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து கும்பகோணம் தெற்கு ஒன்றியம் மாடாக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் க.செ. முல்லைவளவன் தலைமை வகித்தாா், தெற்கு ஒன்றியச் செயலா் தென்னவன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் தில்லையம்பூா் ஊராட்சியில் உள்ள மகாகாளியம்மன் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் சிறுவன் இனியவன் (3) உயிரிழந்தாா். எனவே அக்குளத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என

வழக்குரைஞா்கள் சங்க மண்டலத் தலைவா் சா. விவேகானந்தன், கொள்கைப் பரப்பு துணைச் செயலா் செ. அரசாங்கம், மாநகர மாவட்டச் செயலா் சா.கோ. ராஜ்குமாா், கோவி.பகத்சிங் உள்ளிட்டோா் பேசினா். மாநில துணைச் செயலா் வழக்குரைஞா் எம். செந்தில்குமாா் வரவேற்று பேசினாா். எஸ்.வசந்த் நன்றி கூறினாா்.