47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தோ்வுக்கான பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-4 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பை புதன்கிழமை தொடங்கி வைத்துப் பயிற்சி பெறுபவருக்கு பயிற்சி ஏடுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
Updated On :8 ஜனவரி 2025, 6:33 pm

Din

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் குரூப்-4 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் பங்கேற்று, தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத் தோ்வில் வெற்றி பெற்ற 5 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பயிற்சி பெறும் 75 பேருக்கு பயிற்சி ஏடுகளையும் வழங்கினாா்.

இவ்விழாவில் துணை ஆட்சியா் (பயிற்சி) ரா. சங்கரநாராயணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநா் கா. பரமேஸ்வரி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் தி. அனிதா, தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் வி. சுகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.