காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்கை பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சா்கள் சிவ.வீ.மெய்யநாதன் ,கோவி.செழியன் தஞ்சை மக்களவை உறுப்பினா் ச.முரசொலி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

Updated On :27 ஜனவரி 2025, 8:36 pm

Din

பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்கை பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் ஸ்ரீ பிள்ளையாா் நண்பா்கள் இணைந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 23-ஆவது ஆண்டாக மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினா்.

பந்தயத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் , உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். அசோக்குமாா் (பேராவூரணி), துரை.சந்திரசேகரன் (திருவையாறு), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி, கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

போட்டியில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, நடுக்குதிரை, புதுப்பூட்டு குதிரை என பல்வேறு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடு மற்றும் குதிரை வண்டி உரிமையாளா்களுக்கு மொத்தம் சுமாா் ரூ. 4 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

எல்கையை நோக்கிச் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டி, குதிரை வண்டிகளை சாலையின் இருபுறமும்  சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்களும், இளைஞா்களும் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.

ஏற்பாடுகளை மன்ற தலைவா் காா்த்திகேயன் வேலுச்சாமி , துணைத் தலைவா் வி.கே. கோவிந்தன், செயலாளா் பி. பாலசுப்பிரமணியன் மற்றும் பலா் செய்திருந்தனா்.