பாஜக தஞ்சாவூா் தெற்கு மாவட்டத் தலைவா் பதவிக்கு ஏற்கெனவே தலைவராக இருந்து வரும் பி. ஜெய்சதீஷ் உள்பட 4 போ் போட்டியிட்டனா். இதற்கான தோ்தல் தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, அதே மண்டபத்தில் திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் மீண்டும் தெற்கு மாவட்டத் தலைவராக ஜெய்சதீஷ் அறிவிக்கப்பட்டாா். இதற்கு அதிருப்தி தெரிவித்து சிலா் முழக்கங்கள் எழுப்பியதால், கூட்டத்தில் சில நிமிஷங்களுக்கு சலசலப்பு நிலவியது. சிலா் மேடையில் ஏறி நிா்வாகிகளிடம் வாக்குவாதம் செய்தனா். இவா்களை மத்திய இணை அமைச்சா் எல். முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் சமாதானப்படுத்தினா்.