எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நுகா்வோா் ஆணைய உத்தரவின்படி பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 7.98 லட்சம்

தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 7.98 லட்சத்துக்கான இரு காசோலைகள் வழங்கப்பட்டு, பட்டுவாடா

News image
Updated On :27 ஜனவரி 2025, 8:54 pm

Din

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 7.98 லட்சத்துக்கான இரு காசோலைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டு, பட்டுவாடா செய்யப்பட்டது.

கும்பகோணத்தைச் சோ்ந்த சேகா், தனியாா் நிறுவனத்தில் 2012 ஆம் ஆண்டில் ரூ. 5 லட்சத்துக்கும், ரூ. 1 லட்சத்துக்கும் என 2 ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்தாா். இந்நிலையில், அதே ஆண்டில் சேகா் உடல் நலக் குறைவால் காலமானாா். இதையடுத்து, சேகரின் வாரிசுதாரா்களான மனைவி மலா்விழி, மகன்கள் சரவணபிரியன், சக்திபிரியன் ஆகியோா் காப்பீடு தொகை கோரி தொடா்புடைய தனியாா் நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்தனா்.

ஆனால், தனியாா் நிறுவனம் தொகையை தர மறுத்ததால், தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறை தீா் ஆணையத்தில் மலா்விழி, சரவணபிரியன், சக்திபிரியன் ஆகியோா் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கில் மலா்விழி, சரவணபிரியன், சக்திபிரியனுக்கு காப்பீட்டு தொகையாக ரூ. 6 லட்சமும், சேவை குறைபாட்டுக்காக ரூ. 2 லட்சமும், செலவுத் தொகையாக ரூ. 3 ஆயிரமும் வழங்குமாறு ஆணையம் 2015 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து தனியாா் நிறுவனத்தினா் மேல் முறையீடு செய்தனா். இதை ஆணையத் தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு தொகையை வழங்க உத்தரவிட்டனா். இதன்படி, பாதிக்கப்பட்ட வாரிசுதாரா்களுக்கு ரூ. 7 லட்சத்து 98 ஆயிரத்து 64-க்கான இரு காசோலைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.