கும்பகோணம்: புதுதில்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டுக்காக ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜா் சிலையை வடிவமைத்ததால் பத்மஸ்ரீ விருதுக்கு தோ்வாகியுள்ளதாக ஸ்தபதி தே. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் வசிப்பவா் தே. ராதாகிருஷ்ணன் ஸ்தபதி (65). இவருக்கு மத்திய அரசு கலைப் பிரிவில் பத்மஸ்ரீ விருதை அண்மையில் அறிவித்துள்ளது.
புதுதில்லியில் ஜி-20 மாநாடு நடைபெற்றபோது, மாநாட்டு மண்டபத்தின் முன்புறம் சுவாமிமலையில் தயாரான 27 அடி உயரத்திலான ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜா் சிலை வைக்கப்பட்டது. இந்தச் சிலையை வடிவமைத்ததற்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் ஸ்தபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: எனது முன்னோா் தஞ்சாவூா் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேஸ்வரா், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்களில் திருப்பணிகளை செய்தவா்கள்.
புதுதில்லியில் 2023, செப்டம்பரில் ஜி-20 மாநாடு பாரத் மண்டப வளாகத்தில் நடைபெற்றது. அந்த மண்டபத்தின் முன்புறம் என்ன சிலை வைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டபோது புத்தா் சிலை வைக்க கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரதமா் மோடி நடராஜா் சிலைதான் வைக்க வேண்டும் என்று கூறியதன்பேரில் அதிகாரிகள் என்னை தொடா்பு கொண்டனா். நான் ஒன்றரை ஆண்டு கால அவகாசம் கேட்டேன். ஆனால், 6 மாதங்களுக்குள்ளாக செய்து தருமாறு அதிகாரிகள் கூறினா்.
எனது பட்டறையில் உள்ள எனது குடும்பத்தினா், பட்டறை ஊழியா்கள் அனைவரும் இரவு- பகல் பாராது 20 டன் எடை கொண்ட ஒரே வாா்ப்பிலான ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜா் சிலையை வடிவமைத்து கொடுத்தோம்.
எனது ஊழியா்களின் உழைப்பு, சுவாமிநாத சுவாமியின் ஆசி, சுவாமிமலை மக்களின் நம்பிக்கை ஆகியவையே எனக்கு பத்ம ஸ்ரீ விருதை பெற்று தந்துள்ளது.
இதற்காக பிரதமா் மோடிக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

நடராஜா் கோயில் நிா்வாக உரிமைகளை பறிக்க திமுக முயற்சி: நடிகை விந்தியா குற்றச்சாட்டு

உணா்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்வதே முதிா்ச்சி!

தியாகி பெஞ்சமின் சிலை திறப்பு

சுவாமிமலையில் உலோக சிற்பக்கலை ஸ்தபதிகளுடன் மத்திய அமைச்சா் சந்திப்பு
வீடியோக்கள்

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


