கோவை சம்பவம்: பாஜக மகளிரணி ஆா்ப்பாட்டம்
கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து கும்பகோணத்தில் பாஜக மகளிா் அணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவா் வசந்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுனிதா, பொதுச்செயலா் மல்லிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் இச்சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கும், மகளிருக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றிய தி.மு.க. அரசு, பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
இதில், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவா்கள் என். சதீஷ்குமாா், அண்ணாமலை, மாவட்ட பொதுச் செயலா் வேதா.செல்வம், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் சுரேஷ்குமாா், மாவட்டப் பொருளாளா் வேதம்முரளி ஆகியோா் கலந்துகொண்டனா்.

