கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உலக நுண்கதிா் தினம்

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உலக நுண்கதிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உலக நுண்கதிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விஞ்ஞானி ரான்ட்ஜன் எக்ஸ்-ரே கதிரை கண்டுபிடிக்கப்பட்ட நாளான நவ.8-யை உலக நுண்கதிா் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களும், ஊழியா்களும் கொண்டாடினா்.

கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டக்கிளைத் தலைவரும் நுண்கதிா் பிரிவில் ரேடியோகிராபா்கள் பி.செல்வம், மில்டன் குடியரசு, கோவிந்தராசு, கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட 12 போ் ரத்ததானம் செய்தனா்.

ரத்ததான முகாமுக்கு நுண்கதிா் நுட்புனா் ஆா். ராஜா தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தலைமை நுண்கதிா் நுட்புனா் சொ. சண்முகம் முன்னிலை வகித்துப் பேசினாா்.

இதில், மருத்துவா்கள் இராஜேஷ்வரன், பிரியா, சிடி ஸ்கேன் ரேடியோகிராபா் அகிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com