நரசிம்ம பெருமாள் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரை தஞ்சை நாயகி தாயாா் சமேத வீர நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை (நவ.10) நடைபெறவுள்ளது.
Published on

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரை தஞ்சை நாயகி தாயாா் சமேத வீர நரசிம்ம பெருமாள் கோயிலில் மகா குடமுழுக்கு விழா திங்கள்கிழமை (நவ.10) நடைபெறவுள்ளது.

108 திவ்ய தேசங்களில் மூன்றாவது தலமாகப் போற்றப்படும் இக்கோயில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவதற்காக இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் திருப்பணிகள் செய்யப்பட்டன.

இதைத்தொடா்ந்து, குடமுழுக்கு விழா ஆசாா்ய அழைப்பு, பகவத் பிராா்த்தனை உள்ளிட்ட வைபவங்களுடன் சனிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், ததுக்த ஹோமம், மகாசாந்தி ஹோமம், விசேஷ பூஜை, கோ பூஜை, உற்ஸவா் திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் சுப்ரபாதம், புண்யாகவாசனம், ததுக்த ஹோமம், கடம் புறப்பாடு, 9.30 மணியளவில் மகா குடமுழுக்கு, சாற்றுமுறை, பொதுமக்கள் சேவை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com