தஞ்சாவூர்
பேராவூரணி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
பேராவூரணி துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.11) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், மின்விநியோகம் நிறுத்தம்
பேராவூரணி துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.11) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பேராவூரணி நகா், பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, மதன்பட்டவூா், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வாட்டாத்திக்கொல்லைக்காடு, ஆனைக்காடு, களத்தூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
