புனல்வாசல் புனித அந்தோணியாா்ஆலயத்தில்  பொங்கல் விழா

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

பேராவூரணி: பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல்  புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

 பொங்கல் விழாவில் திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டு அந்தோணியாரை வழிபட்டனா் . ஏற்பாடுகளை புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளரும் பங்கு தந்தைமான ஜான்சன் எட்வா்ட், சிறுமலா் அப்போஸ்தலிக்க பள்ளி இயக்குநா் சூசை அருள், உதவி தந்தை பிரவின், அருட் சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள்  செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com