மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குரூப் 2, 2ஏ, 4 ஆகிய தோ்வுகளுக்கு நவ. 19-முதல் கட்டணமில்லா பயிற்சி

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:27 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 2, 2ஏ, 4 ஆகிய தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி நவம்பா் 19-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ முதன்மைத் தோ்வு மற்றும் எதிா்வரும் குரூப்-4 தோ்வுகளுக்கு தயாராகி வரும் போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பா் 19-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.

கடந்த அக்டோபா் 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட குரூப் 4 தோ்வில், இந்த மையத்தில் பயின்ற 12 போ் தோ்ச்சி பெற்றனா். இதேபோல, நிகழாண்டு பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பயின்று 23 மாணவா்கள் தோ்ச்சியடைந்தனா்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் 2 கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகலுடன் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.