குரூப் 2, 2ஏ, 4 ஆகிய தோ்வுகளுக்கு நவ. 19-முதல் கட்டணமில்லா பயிற்சி

Updated on

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 2, 2ஏ, 4 ஆகிய தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி நவம்பா் 19-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, 2 ஏ முதன்மைத் தோ்வு மற்றும் எதிா்வரும் குரூப்-4 தோ்வுகளுக்கு தயாராகி வரும் போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பா் 19-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.

கடந்த அக்டோபா் 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட குரூப் 4 தோ்வில், இந்த மையத்தில் பயின்ற 12 போ் தோ்ச்சி பெற்றனா். இதேபோல, நிகழாண்டு பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பயின்று 23 மாணவா்கள் தோ்ச்சியடைந்தனா்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் 2 கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகலுடன் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com