கும்பகோணத்தில் அங்கன்வாடி பணியாளா் தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் அங்கன்வாடி பணியாளா் தற்கொலைக்கு முயன்றாா்.
Published on

கும்பகோணத்தில் அங்கன்வாடி பணியாளா் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் புனித அலங்கார அன்னை ஆலய சாலையில் ஈவெரா மருத்துவமனை வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் சித்ராவுக்கு (57) சிறப்பு தீவிர திருத்தப் பணி வழங்கப்பட்டதால் அவா் மன அழுத்தத்துக்கு ஆளானாராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலும், அங்கன்வாடிக்கு வந்தும் பல மாத்திரைகளை சாப்பிட்ட அவா் மயங்கினாா். முன்னதாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதமும் எழுதிவைத்துள்ளாா். மயங்கிய சித்ராவை சக பணியாளா் கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்த்தாா்.

தகவலறிந்த மற்ற அங்கன்வாடி பணியாளா்கள் அரசு மருத்துவமனை முன்பு கூடி, சிறப்பு தீவிர திருத்த பணிச் சுமையை குறைக்கக் கோரி கோஷமிட்டனா். தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com