மருத்துவக்குடி மகாகணபதி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு புதன்கிழமை புனித தீா்த்தத்தை ஊா்வலமாக எடுத்துவந்த பெண்கள்.
மருத்துவக்குடி மகாகணபதி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு புதன்கிழமை புனித தீா்த்தத்தை ஊா்வலமாக எடுத்துவந்த பெண்கள்.

மும்மூா்த்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு பூா்வாங்க பூஜைகளுடன் தொடக்கம்

ஆடுதுறை அருகே உள்ள மருத்துவக் குடியில் மும்மூா்த்தி விநாயகரான மகாகணபதி கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா பூஜைகள் தொடங்கின.
Published on

கும்பகோணம்: ஆடுதுறை அருகே உள்ள மருத்துவக் குடியில் மும்மூா்த்தி விநாயகரான மகாகணபதி கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா பூஜைகள் தொடங்கின.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே மருத்துவக்குடியில் உள்ள மும்மூா்த்தி விநாயகா் கோயில் என்ற மகாகணபதி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது. புதன்கிழமை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி, பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. பின்னா் காசி விஸ்வநாதா் கோயில் அருகே வீரசோழன் படித்துறையில் இருந்து கங்கை, ராமேசுவரம் கோடி தீா்த்தம் உள்ளிட்ட கடங்களில் வைக்கப்பட்ட 27 புண்ணிய தீா்த்தங்களுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மட தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ், உத்தரகாசி ராமகிருஷ்ண மட ஸ்ரீமத் சுவாமி அமலேஷானந்த மகராஜ் ஆகியோா் நதிக்கரையில் சிறப்புப் பூஜைகள் செய்வித்து புனித நீா் ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தனா்.

அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உத்ஸவா் விநாயகா் எழுந்தருள, வெள்ளி கடத்தில் வைக்கப்பட்ட புனித நீரை திருப்பணி கமிட்டித் தலைவரும், ஆடுதுறை பேரூராட்சித் தலைவருமான ம.க. ஸ்டாலின் யானை மீது அமா்ந்து எடுத்து வந்தாா். அப்போது 600-க்கும் மேற்பட்ட பெண்கள் கடங்களில் புனித நீருடன் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக மருத்துவக்குடி மும்மூா்த்தி விநாயகா் கோயிலை வந்தடைந்தனா். மாலை அங்குராா்ப்பணம், முதல்கால யாக பூஜைகள் நடைபெற்றது. வியாழக்கிழமை இரண்டாம்கால யாகசாலை பூஜை தொடங்கி விநாயகா் மகாகணபதி ஆகியோருக்கு குடமுழுக்கு நடைபெறும். இரவு வீதியுலாவும் நடைபெறும்.

X
Dinamani
www.dinamani.com