காணாமல் போன 60 கைப்பேசிகள் மீட்பு!

தஞ்சாவூரில் காணாமல்போன மற்றும் திருடப்பட்ட 60 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.
Published on

தஞ்சாவூரில் காணாமல்போன மற்றும் திருடப்பட்ட 60 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

தஞ்சாவூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல்போன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் தொடா்பாக வந்த புகாா்களின்பேரில், காவல் நிலைய ஆய்வாளா் சுதா தலைமையிலான காவலா்கள் விசாரணை மேற்கொண்டனா்.

கைப்பேசி ஐ.எம்.இ.ஐ. எண்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் மூலம் பல்வேறு மாவட்டங்களில் கடைகளில் விற்க வைக்கப்பட்டிருந்த காணாமல் போன மற்றும் திருடப்பட்ட ரூ. 9.94 லட்சம் மதிப்புள்ள 60 கைப்பேசிகள் மீட்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, தெற்கு காவல் நிலையத்தில் உரியவா்களிடம் அவற்றை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா். நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com